அன்னை மடியில் : 7 ஓகஸ்ட் 1987 — ஆண்டவன் அடியில் : 21 சனவரி 2007
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மணியாவத்தையை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியானந்தன் மயூறா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்வலி.
நாங்கள் தேடும் தேடலின் பொக்கிஷம் - மயு உன் பாத சுவடுகளின் வழியே உன்னை தேடுகின்றோம் - மயு ஆறாத் துயரில் (நீ) எங்களை ஆழ்த்திவிட்டு சென்று ஈர்மூன்று ஆண்டுகள் ஆனதம்மா!! உன் புன்னகையில் நாங்கள் மகிழ்ந்த - காலம் கனவாகி போய்விட்டதம்மா! கண்ணுக்குள் மலர்ந்து இருக்கும் - உன் நினைவுகளை மீட்டு பார்க்க முடியுதம்மா - மயு ஒரு செடியில் பூத்து இருந்த மலர்களின் - ஒரு மலறை இறைவன் ஏனோ தனக்கு பிடிக்குமே. என்று கொய்து விட்டானோ.. இறைவன் எங்கள் மயுறா என்ற மலரை மறுபடியும் எம் குடும்ப தோட்டத்தில் மலரசெய்வீரா! ஆறு ஆண்டுகள் அல்ல - ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன் நினைவுகளுடன் உன் வரவுக்காய் காத்திருப்போம்
உன் வரவை எதிர்பார்க்கும் அப்பா, அம்மா, அக்கா, தங்கை, அத்தான்