பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 03-01-2012 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, முத்தம்மா, காலஞ்சென்ற பொன்னுத்துரை, வேவி ஆகியோரின் சகோதரரும்,
உதயதேவகுலசிங்கம்(தேவன் - ஜேர்மனி), விஜயராணி குணசேகரன்(சிங்கப்பூர்), ஜெயராஜ்(நோர்வே), சிவகுமார்(சுவிஸ்), சிவறூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். |